Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
கிறிஸ்தவர்களின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று (டிசம்பர் 22) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
சமத்துவக் கிருஸ்துமஸ் விழா என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் தவெக தலைவரான நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதில் 1500 பேர் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில், QR கோட் அனுமதிச்சீட்டு வைத்துள்ள நபர்களை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
விழாவில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளார்கள்.
விழா நடைபெறும் நட்சத்திர ஓட்டலுக்கு தவெக தலைவர் விஜய் தற்போது காரில் புறப்பட்டு சென்றுள்ளார். மகாபலிபுரத்தில் விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு செல்ல விஜய் ரசிகர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஊடகங்கள் பல வரிசை கட்டி ஓட்டல் முன்பும் காத்திருக்கின்றன.
எனினும் இந்த நிகழ்வில் பங்கேற்க பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b