விஜய்யால் தனியாக சாதிக்க முடியாது என எச்சரிக்கிறேன் - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.) சென்னை வேளாச்சேரியில் கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பாக, முப்பெரும் விழாவான கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு 2026 மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட்டது. இதில் பாஜக மூத்த
தமிழிசை


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை வேளாச்சேரியில் கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பாக, முப்பெரும் விழாவான கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு 2026 மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட்டது.

இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், இளைஞரணி தலைவர் SG சூர்யா, மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் ஜான்சன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

முப்பெரும் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அன்னதானம் பரிமாறினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது;

பாஜக சார்பில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கிறிஸ்மஸ் விழாவின்போது மட்டுமல்ல அனைத்து நேரங்களிலும் சிறுபான்மையினர் மக்களுக்கு தோழர்களாக இருக்கிறோம். பாதுகாவலர்களாக இருக்கிறோம்.

ஆனால் தமிழக முதல்வர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் தனது ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜகவும் சிறுபான்மை மக்களும் சேர்ந்தால் தங்களுக்கு பிரச்சனை என்பதால் பிரித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிரித்து வைத்தால்தான் ஓட்டு வாங்க முடியும் என்ற நோக்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர் இந்து மத உணர்வோடு எங்கள் உரிமைகளை கேட்டால் எங்களை வெறியர்கள் என்று பட்டத்தை சுமத்தி விடுகிறார்கள். அதற்கு திருப்பரங்குன்றம் ஒரு சாட்சி.

ஒரு பக்கம் முதலமைச்சர் இந்துக்களை திட்டுகிறார். இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் பைபிள் கொள்கையும் திமுக கொள்கையும் ஒன்று என்கிறார். வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம் என்று சொல்கிறார். இந்துக்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள்.

இஸ்லாமிய திருவிழாவில் கொடி ஏற்றியதில் எந்த தவறும் இல்லை ஆனால் இவர்களுக்கு கொடுத்த அதே காவல்துறை பாதுகாப்போடு இந்துக்களையும் தீபம் ஏற்ற வைத்திருக்க வேண்டுமா? இல்லையா? இஸ்லாமியர்கள் கொடியேற்றலாம், இந்துக்கள் தீபம் ஏற்றக்கூடாது என்றால் எந்த அளவிற்கு பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள்.

முதலமைச்சர் சிறுபான்மையினரை தாஜா செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் போன்றவர்கள் வந்துவிட்டதால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து விடும் என்ற கவலையில் இருப்பதால் நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சிறுபான்மையினர் இதனை நம்பக்கூடாது. ஓட்டு வங்கிக்காக மட்டுமே உங்களிடம் இவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்கிறார். ஆனால் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. முதல்வர் இந்த பிரித்தாலும் தன்மையை விட வேண்டும். எங்களை பிரித்து ஓட்டு வாங்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பலிக்காது.

அதிமுக பாஜக கூட்டணி செல்ப் எடுக்காத கார் என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு.... செல்ஃப் எடுக்காதவர்கள் எல்லாம் செல்ஃப் எடுப்பதை பற்றி பேசுகிறார்கள். நாங்களாவது எங்களுடைய சொந்த காரை வைத்திருக்கிறோம். உங்களிடம் கார் மட்டும் தன் உள்ளது என்ஜினை இல்லை. ஆனால் எங்களிடம் என்ஜீனும் உள்ளது எனர்ஜியும் உள்ளது. நீங்கள் உங்கள் எஞ்சின் யை ஸ்டாலின் கையிலும் உதயநிதி கையிலும் கொடுத்துள்ளீர்கள்.

பாஜக அதிமுகவுக்கு முதலாளி என்று சிதம்பரம் சொல்கிறார். அப்படி என்றால் நான் கேட்கிறேன் காங்கிரசுக்கு முதலாளி திமுகவா?

பழைய அடிமைகள் புதிய அடிமைகள் என்று உதயநிதி பேசுகிறார், நீங்கள் யாருக்கு அடிமை என்று எங்களுக்கு தெரியும். உங்களால் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டி போட முடியுமா? மற்ற கட்சிகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தான் அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

போராட்டம் செய்ய முடியவில்லை, கொடியேற்ற முடியவில்லை என்று விசிக புலம்பி கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் இன்றைக்கு பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கிறார்கள். திமுக கூட்டணி ஆட்சிக்கு தயாரா? துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுத்துவிடுவார்களா?

கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்கு... இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று அமித்ஷா சொல்லிவிட்டார். நாங்கள் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கிறோம்.

திமுகவுக்கு எதிராக இருக்கும் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று இபிஎஸ் பேசியது தொடர்பான கேள்விக்கு.....

பாஜக குறித்து விஜய் விமர்சனம் செய்வதால் தான் நாங்கள் விமர்சனம் செய்கிறோம். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தால் நல்லது நடக்கும், இல்லையென்றால் மீண்டும் சினிமாவுக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று ஏற்கனவே நான் பேசி இருக்கிறேன். திமுகவை எதிர்க்க வேண்டியது தார்மீக கடமை. திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தார்மீக கடமை. அதைத்தான் விஜயும் சொல்கிறார், அதில் எனக்கு மகிழ்ச்சி. திமுகவை தீய சக்தி என்று விஜய் சொல்வதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் அந்த தீய சக்தியை வீட்டுக்கு அனுப்பும் சக்தி நமக்கு மட்டும்தான் இருக்கிறதா? கூட்டணியில் சேர வேண்டுமா? என்று விஜய் சிந்திக்க வேண்டும்.

விஜய்யை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. விஜய் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறுவோம்* நான் விஜய்க்கு அறிவுரை சொல்கிறேன். ஆனால் விஜயின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் இன்னொரு பலத்துடன் சேரவேண்டும்.

விஜய்யால் தனியாக சாதிக்க முடியாது என்று விஜய்க்கு எச்சரிக்கை கொடுக்கிறேன். விஜய் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் எங்களோடு இருக்க வேண்டும். தனியாக நின்று காணாமல் போய்விடக்கூடாது.

நாளை பியூஸ் கோயில் வருகிறார். நாளை எங்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அவர் வந்த பிறகுதான் என்ன விஷயங்கள் பேசுவார் என்பது தெரியும்.

நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கனிமொழியிடம் கேட்கிறேன். மாநில உரிமையை திமுக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு வேண்டியதை கேட்டு பெறுகிறார்கள். நாங்கள் மாநில உரிமையை பறிக்கவில்லை. திரும்பத் திரும்ப இதே கதையை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பழைய தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டார்களா என்று பார்த்துவிட்டு கனிமொழி புதிய தேர்தல் வாக்குறுதிகளை போடட்டும்.

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் அனைத்து கட்சி போராட்டம் தொடர்பான கேள்விக்கு... இந்த போராட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கவனத்தை திசை திருப்ப போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டம் பலன் தராது. காங்கிரஸ் மகாத்மா காந்தியை தினம் தினம் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சரும் உதயநிதி ஸ்டாலினும் out of control இல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam