Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 22 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டமானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மங்களாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்ற நபர் அவரது தலையில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்த நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றிய நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சுப்பையாவின் மகன் ரமேஷ் என்பவர் தெரிவிக்கும் போது,
தனது ஜேசிபி இயந்திரத்தை தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் வாடகைக்கு விட்டதாகவும், 9 மாத காலம் ஆகியும் இதுவரை வாடகை தராத நிலையில், பைனான்ஸ் நிறுவனம் தனது வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளதாகவும், ஆகவே தனது ஜேசிபி இயந்திரத்தை வைத்துக்கொண்டு வாடகை தராமல் இருக்கும் நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஜேசிபி எந்திரத்தை மீட்டுத் தர வேண்டும் எனக்கூறி மனு அளிக்க வந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியில்லாமல் தனது தந்தை சுப்பையா இன்றைய தினம் தலையில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN