திருவொற்றியூர், மணலி​ பகுதிகளில் நீருந்து நிலையம் தற்காலிக நிறுத்தம் !
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.) திருவொற்றியூர், மணலி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், நீருந்து நிலைய பிரதான குடிநீர் குழாய் மாற்றும் பணி கார
நீருந்து நிலையம்


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், நீருந்து நிலைய பிரதான குடிநீர் குழாய் மாற்றும் பணி காரணமாக இன்று 22-ம் தேதி காலை 10 மணி முதல் 24-ம் தேதி காலை 10 மணி வரை திருவொற்றியூர், மணலி பகுதியில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு உட்பட்ட கத்திவாக்கம், எண்ணூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சடையன்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை வளர்ச்சி திட்டப்பணியின் கீழ், மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam