Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டத்தில் நாளை (டிசம்பர் 23) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சோழிங்கநல்லூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 23.12.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு / சோழிங்கநல்லூர், சேரன் நகர், பெரும்பாக்கம், சென்னை - 100. (110 கி.வோ பெரும்பாக்கம் துணைமின் நிலையம் அருகில்) அலுவலகத்தில்
நடைபெற உள்ளது.
சோழிங்கநல்லூர் (மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கவுரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், நாராயணபுரம், சித்தாலப்பாக்கம் , அரசன்காலனி, பெரும்பாக்கம்) ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b