Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 22 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டு தோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர்.
14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில், ஜெகதளா மற்றும் பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.
இந்த நிலையில், ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (07.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b