Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 டிசம்பர் (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் நாளை மின்தடை ஏற்படவுள்ளது.
இது குறித்து தமிழக மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கோவையில் நாளை
( 23.12.2025 ) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆர்.எஸ்.புரம்: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை,, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு
சின்னத்தடாகம்: ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், சின்னத்தடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.
நெகமம்: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b