ஆரண்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம்
கேரளா, 23 டிசம்பர் (ஹி.ச.) மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவதற்காக கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்கஅங்கி ஊர்வலம் புறப்பட்டது. சுவாமி ஐயப்பருக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலமானத
தங்க அங்கி ஊர்வலம்


கேரளா, 23 டிசம்பர் (ஹி.ச.)

மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவதற்காக கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்கஅங்கி ஊர்வலம் புறப்பட்டது.

சுவாமி ஐயப்பருக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலமானது தற்போது

ஆரன்முளாவில் இருந்து சிறப்பு பூஜையுடன் புறப்பட்டது, வரும் 27ஆம் தேதி

பக்தர்களுக்கு தங்க அங்கியுடன் ஐயப்பர் காட்சி அளிக்கிறார்.

சபரிமலை மகர விளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை நடை ஆனது கடந்த நவம்பர் மாதம்

17ஆம் தேதி திறக்கப்பட்டது, நடை திறக்கப்பட்ட நாள் முதல் வரலாறு காணாத

பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது.

இதுவரையில் சபரிமலையில் 30

லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி ஐயப்பரை தரிசனம் செய்து உள்ளதாக தகவல்

வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இதே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான

பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற

உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பருக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியானது

பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு

பூஜைகளுடன் தற்போது ஊர்வலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்

செல்லப்பட்டது.

இந்த ஊர்வலமானது வருகிற 26 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி

அளவில் சன்னிதானம் சென்று அடையும் இதனைத் தொடர்ந்து ஐயப்பருக்கு தங்க அங்கி

அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

27 ஆம் தேதி காலை மண்டல பூஜை

வழிபாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தங்க அங்கியில் பக்தர்களுக்கு ஐயப்பர்

காட்சி அளிக்க உள்ளார்.

அன்றைய தினம் இரவு நடை மீண்டும் அடைக்கப்பட உள்ளது

அத்துடன் மண்டலகால பூஜை நிறைவடைகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam