உங்கள் தர்காவிற்கு வந்து நான் வழிபட தயார் எங்கள் தீபத்தூணுக்கு வந்து நீங்களும் விளக்கேற்றுங்கள் - நடிகை கஸ்தூரி
திருப்பரங்குன்றம், 23 டிசம்பர் (ஹி.ச.) பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தி
Kasturi


திருப்பரங்குன்றம், 23 டிசம்பர் (ஹி.ச.)

பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கைதான கோட்டை தெரு பொதுமக்களை பழனியாண்டவர் கோவில் அருகே சந்தித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை. சந்தித்து அவர் கூறியதாவது:

திமுக ஆட்சியில் அரசியல் ரீதியாக கைதான முதல் பெண் நான்தான். இன்று திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மலையை திறந்து வைத்திருக்கிறார்கள் தர்காவில் சந்தனக்கூடு நடக்கிற காரணத்தால் நமக்கு திறந்து விட்டிருக்கிறார்கள்.

முக்கியமா நான் இங்கு ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்த தீபத்தூணில் 1984 இல் ஏற்றியுள்ளார்கள்.

தற்போது அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போராடி கைதாகி இருக்கிறார்கள் அவர்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

அவர்களுக்கான பாராட்டுகளையும், பெருமையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னுடன் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

எல்லா மக்களும் ஒரே குரலில் சொல்வது. தனிப்பட்ட சலுகையோ அடுத்த மக்களுக்கு கெடுதலும் செய்யவில்லை. எங்கள் சாமியை கும்பிட உங்களுக்கு என்ன நோகுது என்று தான் கேட்கிறார்கள். தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒருவர் உயிரை இழந்து இருக்கிறார் அதைக் கூட கொச்சையாக பிரச்சாரம் செய்கிறீர்கள்.

தீபக் கல்லை கல் சர்வே தூண் என சொல்கிறீர்கள் அங்கு தீபம் ஏற்றப்பட்டு இருப்பது வரலாற்று உண்மை. கனிமொழி அக்காவிற்கு அது சர்வே கல் என்று தோன்றுகிறது.

அவர் தொல்லியல் துறை சேர்ந்தவரா, சர்வே கல்லாக இருந்தால் அதில் அனுமர் பொறிக்கப்பட்டிருக்காது. எண்ணிக்கை தான் இருக்கும், சாமி படம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எப்படி.

தூணை கொச்சைப்படுத்தினீர்கள் அதை பொறுத்துக் கொண்டோம் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் அதையும் கொச்சைப்படுத்துகிறீர்கள். இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை மலை மேல் மக்கள் சென்றால் கலவரம் வந்துவிடும் என்று சொன்னீர்கள்.

இன்றைக்கு எப்படி முழுவதுமாக திறந்து விட்டீர்கள். உங்கள் தர்காவிற்கு வந்து நான் வழிபட தயார் எங்கள் தீபத்தூணுக்கு வந்து நீங்களும் விளக்கேற்றுங்கள்.

பத்து ரூபா திரி எண்ணெய் 20 ரூபாய் இருந்தால் இவ்வளவு பெரிய விஷயம் ஆகி இருக்காது.. 14 பெண்கள் கைதாக இருக்க மாட்டார்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் இதுதான் பேச்சாக உள்ளது.

நீதிமன்றம், இந்து நம்பிக்கை, தீபத்தூண் எல்லாவற்றையும் அவமதிக்கிறீர்கள். அதற்கு குரல் கொடுப்பவர்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கிறீர்கள்.

இரண்டு பேர் எண்ணெய் வாங்கினால் கூட அரசுக்கு நல்லது பாட்டில் வாங்கினால் தான் வருமானமா. கலவரம் வரும் என்று சொன்ன சு.வெங்கடேசனிடம் கேட்கிறேன் இப்போது சந்தோசமா. இந்து மக்களை கொச்சைப்படுத்துகிறீர்கள். மலை மீது ஏறினால் கலவரம் வரும் என்றால் யாரால் வரும். ஒருவேளை ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரம் கட்டி முடித்தால் கலைஞர் ஆட்சி வர முடியாது என்று சொன்னதைப்போல மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டால் இவர்களுக்கு கண்டம் என்று யாரும் ஜோசியம் சொல்லியதால் ஒட்டக பூஜை நடந்ததா என்று தெரியவில்லை.

திருப்பரங்குன்றம் முருகன், அவரைவிட காசி விஸ்வநாதர் இருக்கிறார். இந்து நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் திமுகவினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் காசி விஸ்வநாதன் கோயில் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கும் முருகன்தான் குலதெய்வம் மோட்ச தீபம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு விளக்கு ஏற்றும் இடம். அங்கு கடவுளுக்கு தீபம் ஏற்ற மாட்டார்கள் கடவுளுக்கு குன்றின் மேல் தான் தீபம் ஏற்றுவார்கள். குன்றின் மேல் கிடையாது என்ற சொன்ன காரணத்தால் வேறு ஒரு இடத்தில் ஏற்றினார்கள்.

மக்கள் யாரும் பிரச்சனை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை.

வெங்கடேசன் போன்றவர்கள் மிகவும் தவறான போக்கில் பேசுகிறார்கள். கலவரம் வருகிறது என்று. இஸ்லாமியர்கள் மனம் புண்படும் என்று பல்வேறு காரணங்களை சொல்லி இஸ்லாமியர்கள் மீது பொய் பழி போடுகிறார்கள். வெளியில் இருந்து விஷமங்களை அழைத்து வந்து பிரச்சனைகள் பண்ண திட்டமிடுவதாக தகவல் வருகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது.

திரி கொடுத்து விளக்கு கொடுத்து என்னை கிறிஸ்தவர்கள் காசி விஸ்வநாதரை பார்க்க சொல்கிறார்கள். இஸ்லாமிய நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

முஸ்லிம் சகோதரர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது நடுவில் அரசியல் செய்தவர்கள் வேறு எதிலாவது அரசியல் செய்யுங்கள் உங்கள் ஆட்சியை திசை திருப்ப எங்கள் முருகனை பயன்படுத்தாதீர்கள்.

திருமாவளவன் மீது நான் மரியாதை வைத்திருந்தேன். சேராத இடம் சேர்ந்து மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார். என் மகன் பெயர் கார்த்திகேயன். கர்நாடகாவில் முருகன் இருக்கிறார், அங்கு நிறைய பேருக்கு முருகன் பெயர் உள்ளது இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.

அவருக்கு விஷயமே தெரியவில்லை, நம்பிக்கையும் இல்லை அவருக்கு வெறுப்பு மட்டும் தான் உள்ளது. ஆபாச சிற்பம் இருப்பதுதான் இந்து கோவில்கள் என்று சொன்ன பெரியவர் அவர்.

வேங்கை வயல் விவகாரம் உட்பட தூய்மை பணியாளர் பிரச்சினை வரை எதுவும் செய்யவில்லை. அவர் அதற்கெல்லாம் பேசவில்லை இப்போது நாங்கள் பேசினால் வழக்கு தொடுப்பார்கள்.

திருமுருகன் காந்தி ஆபீஸ்க்கு செல்லும் உடையுடன் தியேட்டருக்கு போவீர்களா. அறிவாலயத்தில் உங்கள் முதலாளிகளை பார்க்கப் போகும்போது கைலி அணிந்து செல்வீர்களா.

உங்கள் முதலாளியை பார்க்கும் போது உங்களுக்கு பக்தி வருகிறது என்றால் எங்களுக்கு முருகனை பார்த்தால் பக்தி வரும். யார் என்ன சாப்பிட வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள். மரியாதை கொடுக்குறோமே தவிர நாங்கள் எங்கள் உரிமைகளை இழந்துவிடவில்லை.

யார் நம்பிக்கையும் நான் குறைக்கவில்லை. தீபம் வந்துவிட்டால் எய்ம்ஸ் வருமா என்று கேட்கிறார்களே எங்கள் பெண்கள் பெய் என சொன்னால் மலை பெய்யும்.

திருமாவளவன் கட்சி நடத்துகிறார் அதனால் எய்ம்ஸ் வந்துவிட்டதா அவரை நம்பி வந்த சமூகங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டதா. அவர் கட்சியை கலைத்தால் நான் பத்தாயிரம் பேருக்கு சோறு போடுகிறேன். சந்தனக்கூடு நடப்பதால் சாப்பாடு கிடைக்குமா என திருமாவளவன் கேட்பாரா?

என் அண்ணன் என்பதால் வேளாங்கண்ணியில் வேண்டுதல் நிறைவேற்ற சென்று இருக்கிறேன் எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது அஜ்மீர் தர்காவில் எனக்கு தெரிந்தவர் வேண்டிக்கொண்டார் அதற்கு நான் சென்று நிறைவேற்றினேன்.

எல்லா நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆறாம் தேதி சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக மலைக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். நான் சென்று இருக்கிறேன் என்று சொல்வதற்கு நீங்கள் என்ன கட்சி வைத்திருக்கிறீர்கள். உங்கள் சீட்டு பேரத்தை நீங்கள் போய் பாருங்கள்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார், நோன்பு கஞ்சி கொடுக்கிறார். நான் அதை தவறு சொல்லவில்லை. அனைவரும் நமது சகோதரர்கள் தான். ஆனால் அந்த சகோதர மனப்பான்மை இந்து என்று சொன்னால், சனாதனம் என்று சொன்னால் ஏன் ஒழிப்போம் என்று கிளம்புகிறீர்கள்.

கடவுள் எங்களை நீ இங்கு இல்லை என்றாலும் அங்கு தண்டிப்பார் என்கிற நம்பிக்கையில் தான் இந்து மக்கள் சிலர் உங்களுக்கு ஓட்டு போடுகிறார்கள். அதையும் நீங்கள் ஒழித்து விட்டால் உங்களைப் போன்ற பாவிகளுக்கு இங்கே தண்டனை கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா.

மதக் கலவரம் என்று பேசுகிறீர்களே உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி உள்ளதா.

முருகனுக்கு பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். அவருக்கு நன்கொடையும் அளிக்கிறார்கள். அதை திருமாவளவன் விரும்புகிறார் அதே போல அனைத்தும் அவருக்கு கிடைத்தால் போற்றி புகழ்வார்.

அவருக்கு ஒரு தங்கவேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வாரா. தனக்கென்று வரும்போது ஏற்றுக் கொள்வார் மற்றவர் என்றால் கோபம் வருகிறது.

அவரைப் பற்றிய தனிப்பட்ட கோபம் இல்லை முதலாளி சொல்வதை அவர் பேசுகிறார்.

திருப்பரங்குன்றம் நாட்டை தாண்டி உலக பிரச்சனையாக மாறிவிட்டது இந்தியாவில் எல்லா இடத்திலும் சுப்பிரமணிய சுவாமியை சர்ச்சை பொருளாக்கி பிரபலப்படுத்தி விட்டார்கள். அதை செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

முருகனை வழிபடாதவர்கல் இன்று படித்து தெரிந்து கொள்கிறார்கள். நீதிபதி சாமிநாதன் மீதான விமர்சன தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இங்கு பனையூரில் இருக்கிறார் நண்பர் விஜய். அவர் அதை தாண்டி ஈரோட்டுக்கு சென்று இருக்கிறார். ஆனால் திருப்பரங்குன்றம் அவருக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. கிறிஸ்மஸ் விழாவில் நேற்று பங்கெடுத்திருக்கிறார். கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம்.

அவரைப் பார்த்து சேரும் கூட்டம் எல்லாம் முருக நம்பிக்கை இருக்கக்கூடியவர்கள் தான். அனைத்து நம்பிக்கையும் உள்ளது என்று சொன்னால் தான் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட படங்களை வைத்து அரசியல் செய்ய தகுதியானவர். இப்போது அவர் அவர்கள் பெயரை சொல்வதில்லை எம்ஜிஆர், புரட்சித்தலை பெயர்களை சொல்லி அரசியல் செய்கிறார். இப்படி இருக்க வேண்டும் என்றால் அவர்களைப் போல கடவுளை நம்புபவரை நீங்கள் மதிக்க வேண்டும்.

ஒரு கண்ணில் எண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இத்தனை நாள் மலை மீது யாரையும் விடவில்லை இப்போது சந்தனக்கூடு விழாவிற்கு அனைவரையும் அனுமதிக்கிறீர்கள். இப்போது இதற்காக ஒரு உயிர் போகிறது. யாரும் இதுபோல் உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள் என்று ஒரு அறிக்கையாக கொடுத்திருக்கலாம்.

தமிழகத்துக்கு முதல்வராக வேண்டும் என்னும் கனவு இருப்பவர் தமிழகத்தில் பற்றி எரியும் தீபப் பிரச்சனையை பேசாதது மிகப்பெரிய தவறு. ஒருவேளை அவருக்கு எழுதிக் கொடுப்பவர்கள் இன்று லீவா என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் அவர்தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். கரூருக்கு அவர் வரவில்லை என்று நான் சொன்ன இரண்டு நாளில் கரூருக்கு வந்தார். அதேபோல திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஆமாம் இல்லை என்று சொல்லுங்கள் பேச மடந்தையாக இருந்தால் உங்களுக்கு பேச விருப்பமில்லை என்று நினைக்கிறதா பேச தெரியவில்லை என்று நினைக்கிறதா இரண்டுமே மோசம்.

மதத்தின் பெயரால் நகரம் உருவாக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா சனாதன பூமி தான். ஆன்மீகம் பூமிதான். உதயநிதி, ராசா உள்ளிட்டோர் சொல்வது சனாதனம் கிடையாது அவர்கள் சொல்வதெல்லாம் அபத்தம்.

சனாதனம் என்பது 30 முகோடி கடவுள் இருக்கிறார்கள் அதோடு சேர்த்து இயேசு மாதா அல்லாவையும் நாங்கள் கும்பிடுவது தான் சனாதனம் என்று கஸ்தூரி கூறினார்.

Hindusthan Samachar / Durai.J