Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
சிறந்த கல்வியாளர் சாதனை விருது வழங்கும் விழா காஜாமலை பகுதியில் உள்ள ஹோட்டல்
தமிழ்நாடு யூனிட் 2 பகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பேசும்போது...
நீதிகட்சி கல்விக்காக முக்கியத்துவம் தரக்கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக்
கழகம் இருந்து கொண்டிருக்கிறது.
36 நூலகங்கள் திறந்து வைத்துள்ளோம், 56 நூலகங்கள் பணிகள் நடந்து வருகிறது.
687 நூலகங்களுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டி திறந்து வைத்துள்ளோம்.
164 நூலகங்களுக்கு கழிவறை கட்டி கொண்டு வருகிறோம்.
7008 பள்ளி வகுப்பறைகள் கட்டி வருகிறோம்.
தமிழகத்தில் கல்விக்காக 7500 கோடி ஒதுக்கீடு செய்து
நமக்கு வழங்க வேண்டிய மத்திய அரசு 3500 கோடி வழங்காமல் வஞ்சிக்கின்றன.
கையெழுத்து போட்டால் தான் அடுத்த நிமிடம் பணம் வரும் என்று மிரட்டுகிறார்கள்.
மத்திய அரசின் கொள்கையை ஒத்துக்கொண்டு பத்தாயிரம் கோடி கொடுத்தால் அது
எங்களுக்கு தேவையில்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
நமக்கு வர வேண்டிய நிதி தந்திருந்தால் நாம் இன்னும் எவ்வளவு சாதித்து இருக்க
முடியும்.
தர்மன் பிரதான் மனதில் வைத்துக் கொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை
பாராட்டியுள்ளார்.
1 ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு 29 பைசா கொடுக்குறீர்கள் குறைந்தது 59
பைசாவாது கொடுக்க வேண்டும்.
ஆனால் பீகாரருக்கு மத்திய அரசு 7 ரூபாய் 25 பைசா கொடுக்கிறார்கள்.
எல்லா துறையிலும் வளர்ச்சி பெற்ற துறையாக நம் தமிழக அரசு உள்ளது.
2026 தேர்தலில் இது எப்படி பிரதிபலிக்கும் என்று பார்க்கத்தான் போகிறீர்கள்
என்றார்.
வேண்டுமானால் அது எங்களுக்கு தேவை இல்லை என முதல்வர் கூறியுள்ளார்.
நீதிக்கட்சி தொடங்கி நீதி கட்சி காலம் வருவதற்கு முன்பாக நீங்கள் மருத்துவ
மாணவராக சேர்க்கப்பட வேண்டும் என்றால் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.
பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது
மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். மாணவர்கள் மன அழுத்தம் ஏற்படுத்தி
விடக்கூடாது.
தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 9416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 7898 வகுப்பறைகள்
கட்டி வருகிறோம்.
பாழடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் சமுதாய கூடத்திலோ அல்லது
வாடகை கட்டிடங்களிலோ மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள்
நடத்தப்பட்டு வருகிறது.
கல்வி நிதியை பெற வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நம் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு கல்வியில் 20
நோக்கத்தை அடைய வேண்டும் எனக் கூறுகிறார்கள் அதை நாம் 19 அடைந்து விட்டோம்
கேரளா இருவரையும் அடைந்து விட்டது ஆனால் இந்த இரு மாநிலங்களுக்கு தான் கல்வி
நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறார்கள்.
கல்வியிலும் அரசியல் செய்வது
வேதனையாக உள்ளது.
இருந்த போதும் முதலமைச்சர் கல்விக்கான நிதியை நிதி
நெருக்கடி ஏற்பட்டாலும் அதை வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam