Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.
அந்தவகையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் இன்று
(டிசம்பர் 23) சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பியூஷ் கோயலை பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. கூட்டத்தில் தமிழக பா.ஜ.தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து, தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல் ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கிறார். இதில் பாஜ போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / vidya.b