Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 டிசம்பர் (ஹி.ச.)
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைமைச் செயலாளர்களின் தேசிய நாடு நடத்தப்பட்டு வருகிறது.
முதல் மாநாடு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தர்மசாலாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மாநாடுகள் முறையே 2023 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் புதுடெல்லியில் நடைபெற்றன.
தொடர்ந்து டெல்லியில் டிசம்பர் 26-28 -ம் தேதி வரை தலைமைச்செயலாளர்களின் 5-வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த மாநாடு இருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாநிலங்களுடன் கூட்டாக ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான பொதுவான வளர்ச்சித் திட்டம் மற்றும் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதை இம்மாநாடு வலியுறுத்தும்.
தொழில்முனைவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துதல், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு நீடித்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் மக்கள் தொகை பங்கீட்டைப் பயன்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு இது அடித்தளம் அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM