கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.) கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழம
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம்


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்டிரல் - அரக்கோணம், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரெயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM