Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா முன்னாள் எம்.பி-யும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளருமான மது கௌடு யாசி கோவை, கோபாலபுரத்தில் உள்ள மாநகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர் திருத்தம் என்ற பெயரில் மக்களவையில் மசோதாவை நிறைவேற்றியதில் காந்தியின் தத்துவத்தை சிதைத்து ஏழை இந்தியர்கள் வேலை வாய்ப்பு செயின் உரிமையை பறிக்கும் திட்டமிட்ட முயற்சி.
2014-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தின் மீது கடுமையான வெறுப்பை பிரதமர் மோடி கொண்டு உள்ளதாகவும் கடந்த 11 ஆண்டுகளில் வரவு செலவு திட்டத்தை குறைப்பதில் தொடங்கி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது வரை மோடி அரசு திட்டமிட்டு திட்டத்தை வலுவிழக்க செய்து உள்ளது.
மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக உரிமை பறிப்பு,நிதிச் சுமை, கட்டாய வேலை நிறுத்தம்,கிராம சபைகளில் அதிகாரம் பறிப்பு மற்றும் தேவை அடிப்படையிலான முறை நீக்கம் முடிவுகளை செய்து வருவதாகவும் அதனை கண்டித்து மக்கள் விரோதம், தொழிலாளர் விரோதம், தாக்குதல் எதிர்த்து வீதி முதல் நாடாளுமன்றம் வரை போராடப் போவதாக தெரிவித்தனர்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந்த வழக்குகள் அனைத்தும் சட்ட ரீதியானது அல்ல என்றும் தனிப்பட்ட வெறுப்பால் தொடுக்கப்பட்ட வழக்கு என கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை தொடங்கியதற்காக அமலாக்கத்துறையை சிறப்பு நீதிமன்றம் கடுமையாக கண்டித்து உள்ளது என்றும் 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பதியப்பட்டு FIR-க்கு முகாம் திறம் இல்லையென சி.பி.ஐ மற்றும் அமலக்கத்துறை ஒப்புக்கொண்ட நிலையில் அரசியல் பலி வாங்கும் நடவடிக்கைக்காக தெளிவான உதாரணமாகும்.
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது போடப்பட்ட நேஷனல் ஹெரால்டு
வழக்கு பொய் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது அதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் மது கௌடு யாசி தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J