Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று
(டிசம்பர் 23) மாலை நடைபெறுகிறது.
இதுகுறித்து இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம். இன்று (23-ந்தேதி செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் அடையா கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b