Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (டிசம்பர் 23) கூறியிருப்பதாவது,
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை.
உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b