மண்ணுக்கும் - மக்களுக்கும் உணவளிக்கும் உயர்குடியாம் உழவர்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்..! கே. என்.நேரு
தமிழ்நாடு, 23 டிசம்பர் (ஹி.ச.) வேளாண் பெருங்குடி மக்களின் நலனை இன்று போல் என்றும் பாதுகாப்போம் என அமைச்சர் கே.என்.நேரு விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வியர்வை சிந்தி நாட்டின் உயர்வுக்கு முதுகெலும்பாய் திகழும் விவசாயிகளுக்காக நுகர் பொருள
கே. என்.நேரு


தமிழ்நாடு, 23 டிசம்பர் (ஹி.ச.)

வேளாண் பெருங்குடி மக்களின் நலனை இன்று போல் என்றும் பாதுகாப்போம் என அமைச்சர் கே.என்.நேரு விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வியர்வை சிந்தி நாட்டின் உயர்வுக்கு முதுகெலும்பாய் திகழும் விவசாயிகளுக்காக நுகர் பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கினார் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர்... அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை உருவாக்கி, திட்டங்கள் பல தீட்டி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகிறார் நம் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர்...

நம் தலைவர் அவர்களின் வழியில் வேளாண் பெருங்குடி மக்களின் நலனை இன்று போல் என்றும் பாதுகாப்போம்..! உலகின் உயிர் ஆதாரமான விவசாயிகளையும் - விவசாயத்தையும் போற்றுவோம்..!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam