புதுச்சேரியில் சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தின விழா - முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
புதுச்சேரி, 23 டிசம்பர் (ஹி.ச.) புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளர்கள் தின விழா ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும். நடப்பாண்டு தொடர் மழையால் இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டு இன்று (டிசம்பர் 23) நடைபெற்றது. புதுச்ச
புதுச்சேரியில் சர்வதேச மாற்றுத் திறனாளர்கள் தின விழா - முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு


புதுச்சேரி, 23 டிசம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளர்கள் தின விழா ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும். நடப்பாண்டு தொடர் மழையால் இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டு இன்று (டிசம்பர் 23) நடைபெற்றது.

புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது,

மாற்றுத் திறனாளிகள் என சொல்லும்போது எத்தனை சதவீதம் இருந்தால் உதவிகள் கிடைக்கும் என்ற நிலையில் 40 சதவீதம் இருந்தாலே போதும் என்று உறுதி செய்துள்ளோம். மாற்றுத்திறனாளிகள் வண்டிக்கான பெட்ரோல் 25 லிட்டரில் இருந்து 5 லிட்டர் உயர்த்தி 30 லிட்டராக தரப்படும்.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த செலவுகளை சமாளிக்க மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துகிறோம். ரூ.3,000 உதவித்தொகை வாங்குவோருக்கு ரூ.3,500 ஆகவும் ரூ.4,800 வாங்குவோருக்கு ரூ.5,500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது 15 கிலோ அரிசிக்கு பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் அரசு செலுத்துகிறது. அது 20 கிலோ அரிசிக்கான பணமாக தரப்படும்.

தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோவுக்கு ரூ.30 தருவதை ரூ.40 ஆக உயர்த்தி மாதம் ரூ.800 அரிசி பணம் தரப்படும். இலவச துணிக்கு பண்டிகை காலத்தில் ரூ.500 தருவதை ரூ.750 ஆக உயர்த்தி தரப்படும். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் தரப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b