Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 23 டிசம்பர் (ஹி.ச.)
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த விவகாரத்தில் உரிய தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM