நாளை காலை விண்ணில் பாயும் எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட் - இன்று காலை தொடங்கிய கவுண்ட்டவுன்
ஸ்ரீஹரிகோட்டா, 23 டிசம்பர் (ஹி.ச.) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் , ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி
நாளை காலை 8.54 மணிக்கு விண்ணில் பாயும் எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட் - இன்று காலை தொடங்கிய கவுண்ட்டவுன்


ஸ்ரீஹரிகோட்டா, 23 டிசம்பர் (ஹி.ச.)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் , ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட‘புளூபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

Hindusthan Samachar / JANAKI RAM