Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் 01-01-2026 ஐ தகுதிநாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டதின் தொடர்ச்சியாக, 19-12-2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக உரிமைக்கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளின் காலமான, (19-12-2025 முதல் 18-1-2026 வரை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைவிட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்டு, தகுதியுடைய வாக்காளர்கள் /இளம் வாக்காளர்களிடம் படிவங்கள் அலுவலக நேரங்களில், படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று வருகின்றனர். மேலும், 27.12.2025, 28.12.2025 (சனி, ஞாயிறு) மற்றும் 3.01.2026, 04.01.2026 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும், மேற்படி தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர்.
எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி உரிமை கோரல் தொடர்பான படிவங்கள் மற்றும் புதிய வாக்காளர் சேர்த்தல்
( படிவம் -6 மற்றும் உறுதி மொழி படிவம்) நீக்கல்
(படிவம் -7), இடமாறுதல் மற்றும் முகவரி மாற்றம், நகல் வாக்காளர் புகைப்பட அடையாள, மாற்றுத் திறனாளி குறியீடு, (படிவம்-8) ஆகியவற்றை வழங்கி வாக்காளர்கள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், https://Voters.eci.gov.in// என்ற இணையதள வழியாகவும், வாக்காளர்கள் தங்களது படிவங்களை சமர்பிக்கும் வசதி உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
இப்பணியில் களப்பணியாற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மூத்த வாக்காளர்கள் பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உதவிட பல்வேறு துறைகளின் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.
என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b