அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு
தென்காசி, 23 டிசம்பர் (ஹி.ச.) ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்னி பாத் திட்டத்தில் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டன. அதன் அடி
Agnipath Scheme


தென்காசி, 23 டிசம்பர் (ஹி.ச.)

ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்னி பாத் திட்டத்தில் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டன.

அதன் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வானது நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த 3 நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற வீரர்கள் தற்போது அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,340 வீரர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அக்னிபாத் திட்டத்தில் மூலம் ராணுவத்திற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அக்னிபாத் திட்டத்திற்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் சிறிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்துள்ள சம்பவத்தை இணைய வாசிகள் கொண்டாடி வரும் நிலையில், நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுடன் செல்லும் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN