Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 டிசம்பர் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு பின்னர் கோவில் பின்புறம் உள்ள 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையை சுற்றி கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் என சுமார் 20 முதல் 30 ஆயிரம் பக்தர்கள் அனுதினமும் அதிகாலையில் இருந்து இரவு நேரங்கள் வரை கிரிவலம் மேற்கொள்ளது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த யுவன்சங்கர்ராஜா மற்றும் ரோமியோ ஜெயபால் என்ற இரண்டு இளைஞர்கள் இரவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்ட ஆந்திர மாநில பக்தர்கள் உட்பட நான்கு பேரிடம் இருச்சக்கர வாகனத்தில் சென்றபடியே அக்னி லிங்கம், காளியம்மன் கோவில், எமலிங்கம் உள்ளிட்ட இடங்களில் மூன்று செல்போனை பறித்து கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு மீண்டும் செல்ஃபோன் பறிப்பதற்காக புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூன்று பேர் தகவல் அறிந்து அவர்களை பின் தொடர்ந்துள்ளனர், அப்போது இடுக்கு பிள்ளையார் கோவில் அருகே கிரிவலம் சென்ற பக்தரிடம் செல்போன் பறிக்க முயன்ற போது அங்கிருந்த பொது மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மடக்கி பிடித்து கொடுத்துள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருந்த நான்கு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN