Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் அடுத்தகட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக ”புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்” என்ற தொடர் சூறாவளி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் விபரம்;
28-12-2025 ஞாயிற்றுக்கிழமை - திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர்
29-12-2025 திங்கட்மிழமை - திருத்தணி மற்றும் திருவள்ளூர்
30-12-2025 செவ்வாய்க்கிழமை - கும்மிடிப்பூண்டி
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM