Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 24 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க பயன்படும் என்பதால் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் BlueBird Block-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam