34.30 கோடியில் புதிதாக வாங்கப்பட்ட 20 குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச) தமிழ்நாடு போக்குவரத்து துறையின் பொன்விழா ஆண்டை ஒட்டி 105778 போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூபாய் 3.33 கோடி மதிப்பில் சுவர் கடிகாரங்கள் வழங்கும் நிகழ்வினையும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்ச
Cm


Bus


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச)

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் பொன்விழா ஆண்டை ஒட்டி 105778 போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூபாய் 3.33 கோடி மதிப்பில் சுவர் கடிகாரங்கள் வழங்கும் நிகழ்வினையும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,

தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளிலும் சொகுசு பயணம் மேற்கொள்ளும் வகையில் 20 வால்வோ பேருந்துகள் சேவை இன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்ப இருந்து இயக்கம் பணியாளர்களுக்கு வாழ்வு நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களிடமிருந்து பெரும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் வாங்கப்படும்.

ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாய் 70 பைசா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கும்.என்றார்.

புதிய வால்வோ பேருந்துகளில் வழித்தட விபரம்:

சென்னை TO மதுரை - 2 பேருந்துகள்

சென்னை TO திருநெல்வேலி - 2 பேருந்துகள்

சென்னை TO திருச்செந்தூர் - 2 பேருந்துகள்

சென்னை TO தஞ்சாவூர் - 1 பேருந்து

சென்னை TO சேலம் - 1 பேருந்து

சென்னை TO திருப்பூர் - 2 பேருந்துகள்

சென்னை TO பெங்களூர் - 2 பேருந்துகள்

சென்னை TO திருச்சி - 2 பேருந்துகள்

சென்னை TO கோயம்புத்தூர் - 2 பேருந்துகள்

கோயமுத்தூர் TO பெங்களூர் - 2 பேருந்துகள்

சென்னை TO நாகர்கோயில் - 2 பேருந்துகள்

*புதிய வால்வோ பேருந்துகளின் கட்டண விபரம் (தோராயமாக)( அதிகாரிகள் தகவல்)*

சென்னை TO மதுரை - 845 ரூபாய்

சென்னை TO திருநெல்வேலி - 1054 ரூபாய்

சென்னை TO திருச்செந்தூர் - 1170 ரூபாய்

சென்னை TO தஞ்சாவூர் - 700 ரூபாய்

சென்னை TO சேலம் - 600

சென்னை TO திருப்பூர் - 860 ரூபாய்

சென்னை TO பெங்களூர் - 735 ரூபாய்

சென்னை TO திருச்சி - 625 ரூபாய்

சென்னை TO கோயம்புத்தூர் - 935 ரூபாய்

கோயமுத்தூர் TO பெங்களூர் - 770 ரூபாய்

சென்னை TO நாகர்கோயில் - 1275 ரூபாய்

*புதிதாக வாங்கப்பட்ட வால்வோ பேருந்தின் சிறப்பம்சம்.*

51 பயணிகள் ஒரே நேரத்தில் இப்பேருந்தில் பயணம் செய்ய முடியும்.

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட பேருந்து.

சென்ட்ரலைஸ்டு குளிர்சாதன வசதி மற்றும் தனித்தனி இருக்கைகளுக்கும் குளிர்சாதன வசதிகொண்டது.

2×2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 வசதியான இருக்கைகள், வெளிப்புற காட்சியை ரசிக்க விசாலமான Panoramic ஜன்னல்கள்:

வசதியுடன் கூடிய இருக்கைகள், இரட்டை USB Mobile Charging Ports, பத்திரிகைகள், பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம்.

மனித உடல்

அமைப்பிற்கு ஏற்ற Ergonomic Control Layout, வளைந்த வடிவ Dashboard.

Air-Suspension கொண்ட ஓட்டுநர் இருக்கை, முழங்கால் பாதுகாப்பு அமைப்பு (Knee Impact Protection System).

L PX Suspension System - L Steering Stability, Air Spring-, Shock Absorber System. EVSC, ESP, ASR மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் பாதுகாப்பு அமைப்பு.

அவசரநிலையில் விரைவாக பயணிகளை வெளியேற்ற அகலமான Roof Escape Hatch, முன், பின் மற்றும் பக்க மோதல்களில் தாக்கத்தை குறைக்கும் FUP / FIP / SUPD பாதுகாப்பு அமைப்புகள்.

மேம்பட்ட Rollover & Pedestrian பாதுகாப்பு வசதி:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் BS-VI

அவசரகாலத்தில் பயணிகள் வெளியேறுவதற்கு அவசரகால வெளியேறும் வழி, விபத்துகளை தவிர்த்திட வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள்:

வாகன செயல்திறன் மற்றும் கோளாறுகளை உடனுக்குடன் கண்டறிய Electronic Diagnostic Control வசதி, ரிவர்ஸ் சென்சார் வசதி மற்றும் கேமரா:

வாகனத்தை கண்காணித்திட Bus Tracking System வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பேருந்தின் உள்பகுதியில் தீ ஏற்பட்டால் விபத்தை தடுக்க தானியங்கி தீ தடுப்பு பாதுகாப்பு அமைப்பு உள்ளது.

பேருந்துகளில் உள்ள அனைத்து கண்ணாடிகளும் அவசரகால வழிகளாக செயல்படுத்த முடியும்.

அவசர காலங்களில் பேருந்துகளில் இருந்து இறங்கும் வகையில் அவசர கால ஏணி பேருந்தில் வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ