Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 24 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் அன்னூரில் ஒட்டார்பாளையம் பகுதியில் திமுக சார்பில் மத்திய அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்னூரில் பல்வேறு இடங்களில் இருந்து முதியவர்களை வாகனத்தில் அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்துள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மே தின நல்வாழ்த்துக்கள் பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற 75 வயது மூதாட்டியும் அழைத்து வந்துள்ளார்.
கூலி வேலை செய்து தனது காலத்தை கடத்தி வந்த அந்த மூதாட்டியை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து வெயிலில் நிற்க வைத்ததால் உடல் சோர்வு ஏற்பட்டு ஆர்ப்பாட்டத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு அன்னூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்த நிலையில் வரும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதியவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து சிரமப்படுத்தியதால் மூதாட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam