Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச)
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மீது திமுக எம்பி டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் டி.ஆர் பாலு, அண்ணாமலை இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என இந்த வழக்கில் குறுக்கு விசாரணை ஜனவரி 20 ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை பெருநகர சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை அவர்கள், Dmk Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களையும் டி.ஆர் பாலுவின் சொத்துக்கள் குறித்தும் கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.
இது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் டி.ஆர் பாலு, அண்ணாமலை ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என இந்த வழக்கில் குறுக்கு விசாரணை ஜனவரி 20 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
மேலும் இதன் அடுத்த விசாரணையின் போது டி.ஆர் பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ