Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 24 டிசம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையானது தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாக விளங்குகிறது.
இந்த மலர்ச்சந்தைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் விற்பனை கொண்டு வரப்படுகின்றன.
இங்கிருந்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனை செய்ய வாங்கிச் செல்லப்படுகிறது. பொதுவாக முகூர்த்தம் மற்றும் விஷேச தினங்களில் பூக்களின் விலை வழக்கமாக அதிகரித்து காணப்படும்.
அந்தவகையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு காரணமாகவும் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000ஆக உயர்ந்துள்ளது. நாளை
(டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும் மற்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாகவும் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இன்றைய (டிசம்பர் 23) நிலவரப்படி பிச்சிப்பூ ரூ.2500 வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், செவ்வந்தி கிலோ ரூ.120க்கும், சம்பங்கி கிலோ ரூ.240க்கும், விற்பனையாகிறது.
தாமரை ஒரு பூ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b