ஜனவரி 1 ஆம் தேதி முதல் முத்துநகர் விரைவு ரயில் சேவை நேர மாற்றம் அமல் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.) தென் மாவட்ட ரயில்களில் ஒன்றான தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் நேரம் வருகிற 1ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ
ஜனவரி 1 ஆம் தேதி முதல் முத்துநகர் விரைவு  ரயில் சேவையில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)

தென் மாவட்ட ரயில்களில் ஒன்றான தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் நேரம் வருகிற 1ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் அதிவேக விரைவு இரயில் நேரம் வருகிற 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40க்கு பதில் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு 9:05க்கு புறப்படும். மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் செல்லும்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b