செய்த திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருப்பவர் எம்ஜிஆர் - நயினார் நாகேந்திரன் புகழாரம்
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச) காலம் கடந்தும் மங்காத புகழ் கொண்டவர் எம்ஜிஆர் என அவரது நினைவு நாளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏழ
Nainar Nagenthran


Tw


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச)

காலம் கடந்தும் மங்காத புகழ் கொண்டவர் எம்ஜிஆர் என அவரது நினைவு நாளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏழை எளிய மக்களின் நம்பிக்கையாக, சமூக நீதியின் நாயகராக வாழ்ந்த மாபெரும் சகாப்தம் புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று.

மனிதகுலத்தின் மாணிக்கம்; திரை உலகிலும், அரசியலிலும் சந்திரபிம்பமாக இருந்தவர்; தன்னுடைய திட்டங்களால் பசியை பொசுக்கியவர்; கல்வி, சுகாதாரத்தில் புரட்சி செய்தவர்; அவர் செய்த திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

காலம் கடந்தும் மங்காத புகழ், தலைமுறைகளைத் தாண்டும் தாக்கம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில் அவரின் புகழை போற்றி வணங்குவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ