Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாவட்டம் கொளத்துார் வண்ண மீன் வர்த்தக மையத்தில், வரும் டிசம்பர் 27, 28 ஆகிய இரு நாட்களில் 'வண்ண மீன் வர்த்தக திருவிழா' நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், கொளத்துார் வண்ண மீன் வர்த்தக மையம் செயல்பட்டு வருகிறது. வண்ண மீன் வளர்ப்பு, அதன் வர்த்தகம் பற்றி எடுத்துரைத்து, பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், 'வண்ண மீன் வர்த்தக திருவிழா' வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
இவ்விழாவில், வண்ண மீன் காட்சியகம், பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பொதுமக்கள், மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b