Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 24 டிசம்பர் (ஹி.ச.)
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி, நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது.
இந்த பகுதிகளில் வாழை, மரவள்ளி கிழங்கு, தக்காளி, தென்னை விவசாயம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் வந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வதால், காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து காட்டுப்பன்றிகளை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
ஆனால் இரும்பு கூண்டில் காட்டுப்பன்றிகள் சிக்காததால், கோதவாடி பகுதியில் விளை நிலங்களுக்கு இடையே பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டு பன்றிகளை பொள்ளாச்சி வனத்துறையினர் துப்பாக்கி மூலம் சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பன்றிகளை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வனத்துறையினர் புதைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN