Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 24 டிசம்பர் (ஹி.ச.)
இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்திச் செல்ல இருப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை அடுத்த தெற்குவாணிவீதி கிராமத்தில் உள்ள ஒரு தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனால் அந்த பகுதியில் சோதனை செய்ததில் அந்த தென்னந்தோப்பில் 550 கிலோ கஞ்சா இருந்ததை பார்த்து அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அந்த தோப்பு பகுதியில் இருந்த மண்டபம் வேதாளை பகுதிகளை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் உள்ளிட்ட 10 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்
கஞ்சா பண்டல்கள் அனைத்தையும் படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN