தவெக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் செங்கோட்டையன் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.) முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 24) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தி வருகின்ற
எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து தவெக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் செங்கோட்டையன் மரியாதை


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)

முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 24) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார்.

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான செங்கோட்டையன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

அண்மையில் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b