Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 24 டிசம்பர் (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (டிசம்பர் 24) கூறியிருப்பதாவது,
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b