தந்தை பெரியார் நினைவு நாளில் தவெக தலைவர் விஜய் மரியாதை
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.) தந்தை ''பெரியார்'' ஈ.வெ. ராமசாமியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமூக நீதிப் பயணத்தை நினைவு கூர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தந்
தந்தை பெரியார் நினைவு நாளில் தவெக தலைவர் விஜய் மரியாதை


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)

தந்தை 'பெரியார்' ஈ.வெ. ராமசாமியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமூக நீதிப் பயணத்தை நினைவு கூர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தந்தை 'பெரியார்' ஈ.வெ. ராவின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செய்துள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சமூக நீதியின் முன்னோடி,சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b