Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பிஎச்.டி படிக்க ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவ - மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2025-2026ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (பிஎச்.டி) பயிலும் புதிய மற்றும் புதுப்பித்தல் மாணவர்கள் https://adwphdscholarship.in/ என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் திட்ட விதிமுறைகள் (www.tn.gov.in/formdept list.php) முகவரியில் யாவரும் அறியும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2026 நாளன்று மாலை 5.45 மணிக்குள், ‘‘ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b