தாதர்- திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.) தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மராட்டிய மாநிலம் மும்பை தாதரில் இருந்து திரு
தாதர்- திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)

தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மராட்டிய மாநிலம் மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 15 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக ஜனவரி 24-ந்தேதி முதல் இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

அதன்படி, 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 1, 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 2, 3 அடுக்கு எகானமி பெட்டி 1, முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் 4 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b