Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
அப்பல்லோ மருத்துவமனைக் குழும நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பன்முக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தேசிய பங்குச் சந்தையிடமிருந்து 'எந்த ஆட்சேபனையும் இல்லை' என்ற கடித்தை பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு செப்டம்பர் மாதம் இந்தியப் போட்டி ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்தே இது வந்துள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனைகள் ஒரு பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனை அதன் மருந்தகம் மற்றும் டிஜிட்டல் ஹெல்த்கேர் துறையை தனியாக பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அப்பல்லோ குழும நிறுவனங்களின் வாரியங்கள் மற்றும் தணிக்கைக் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் நிறுவனம், அதன் மதிப்பைப் பெருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதன் ஓம்னிசேனல் மருந்தகம் மற்றும் டிஜிட்டல் சுகாதார வணிகங்களை 18-21 மாதங்களுக்குள் தனித்தனியாகப் பட்டியலிட அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தது.
இந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, அப்பல்லோ ஹெல்த் எண்டர்பிரைஸ் லிமிடெட் (AHEL) நிறுவனத்தின் அடையாளம் காணப்பட்ட வணிக நிறுவனம் அப்பல்லோ ஹெல்த்டெக் லிமிடெட் (AHTL) நிறுவனமாகப் பிரிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, அப்பல்லோ ஹெல்த்கோ லிமிடெட் (AHL) மற்றும் கெய்மெட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை AHTL உடன் இணைக்கப்பட்டு, சுகாதார மற்றும் விநியோக வணிகங்களை ஒருங்கிணைக்க வழிவகுக்கும்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, AHTL-இன் பங்குப் பத்திரங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
அப்பல்லோ ஹெல்த்டெக் நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவது, பங்குச் சந்தைகளின் பட்டியல் நிபந்தனைகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உட்பட்டது என்று என்எஸ்இ நிறுவனம், நிறுவனத்திற்கு வழங்கிய கருத்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்துக் கடிதத்தின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்கள் ஆகும். அதற்குள் இந்தத் திட்டம் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று என்எஸ்இ கூறியுள்ளது.
பரிவர்த்தனையின் இறுதி கட்டம், AHL, AMPL மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு இடையே செயல்படுத்தப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், தற்போதுள்ள பங்குதாரர்களிடமிருந்து அப்பல்லோ மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் (AMPL) நிறுவனத்தின் 74.5% பங்குரிமையை AHTL கையகப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
AHL நிறுவனம் அப்பல்லோ 24|7 தளத்தை இயக்குகிறது. இது மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் நோயறிதல் சோதனைகளை முன்பதிவு செய்ய உதவுகிறது. மேலும் மருந்தக விநியோக வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.
அதே போல் கெய்மெட் நிறுவனம் மருந்துப் பொருட்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் எஃப்எம்சிஜி பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த முன்மொழிவு, சுகாதார சேவை நிறுவனத்தின் பங்குதாரர்கள் நாட்டின் மிகப் பெரிய ஓம்னி-சேனல் மருந்தகம் மற்றும் டிஜிட்டல் சுகாதார தளத்தில் நேரடிப் பங்குரிமையைப் பெற வழிவகுக்கிறது என்று அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி கூறியிருந்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM