Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
புதிய பிஎஸ்என்எல் (BSNL) பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விலை வெறும் ரூ.251 மட்டுமே ஆகும். இது ஒரு ப்ரீபெய்ட் பிளான் ஆகும்.
கடந்த காலத்தில் ரூ.251 என்கிற விலைக்கு பல வகையான (நன்மைகளுடன்) பிஎஸ்என்எல் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைத்துள்ளன. தற்போது இந்நிறுவனம் ரூ.251 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இப்போது 100ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
பிஎஸ்என்எல்-ன் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு பிஐடிவி (BiTV) அணுகலையும் வழங்குகிறது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளமாகும்; இதன்கீழ் 450 க்கும் மேற்ப்பட்ட டிவி சேனல்களும் அணுக கிடைக்கும். கூடவே இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் 30 நாட்களுக்கு இலவச பிஐடிவி அணுகல் கிடைக்கும் என்று டெலிகாம்டால்க் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்திற்கான ஒரு நாளைக்கான செலவு வெறும் ரூ.8.96 மட்டுமே ஆகும்.
இந்த திட்டம் சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது, அது தான் இந்த திட்டத்தின் பெஸ்ட் பார்ட் ஆகும். எண்டர்டெயின்மெண்ட் (ஓடிடி, டிவி சேனல்கள்) தேவை இல்லை என்றாலும் கூட ஏராளமான 4ஜி டேட்டா உடன் சேர்த்து வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கி - ஒரு தரமான மன்த்லி ப்ரீபெய்ட் பிளான் ஆகவும் மாறுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM