சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பங்களாதேஷ் நாட்டு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச) சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு கிடைத்த மின்னஞ்சலில் பங்களாதேஷ் நாட்டு தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள பங்களாதேஷ் நாட்டு தூதரகத்தில் மோப்ப
Bangladesh


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச)

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு கிடைத்த மின்னஞ்சலில் பங்களாதேஷ் நாட்டு தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள பங்களாதேஷ் நாட்டு தூதரகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த 18-ம் தேதி இவர் அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவரம் வெளியானவுடன் வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது. மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது.

இந்த சம்பவத்திற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பங்களாதேஷ் நாட்டின் தூதரத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பை பலபடுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ