தோழியாக பழகி நூதன முறையில் 15 சவரன் தங்க நகையை திருடிய பெண் கைது
திண்டுக்கல், 25 டிசம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகரை சேர்ந்தவர் முருகவேல் (55). இவரது மனைவி செல்வி (49). இவர்கள் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். மாற்றுத்திறனாளியான இவரது கணவருக்கு
Prison


திண்டுக்கல், 25 டிசம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகரை சேர்ந்தவர் முருகவேல் (55). இவரது மனைவி செல்வி (49). இவர்கள் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளியான இவரது கணவருக்கு கண் பார்வை தெரிய வேண்டும் என்பதற்காக, 13 நாட்கள் கணக்கன்பட்டி கோவிலில் தங்கி வேண்டுதல் வைத்து வந்தார். அப்போது, செல்வியுடன் மதுரை திருநகரை சேர்ந்த ஆரோக்கியமேரி (28) என்பவர் தோழியாக பழகி உள்ளார். 13 நாட்கள் முருகவேல், இவரது மனைவி செல்வி மற்றும் ஆரோக்கியமேரி ஆகியோர் கோவிலில் தங்கியிருந்துள்ளனர்

அப்போது, தனது குடும்ப விவரங்கள் மற்றும் வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் வைத்திருப்பது உள்ளிட்ட விவரங்களை ஆரோக்கியமேரியிடம் சொல்லி உள்ளார்.

மறுநாள் செல்வியின் பையில் வைத்திருந்த அவரது வீட்டு சாவி, பீரோ சாவி மற்றும் அவர்களது ஆதார் கார்டு ஆகியவை காணவில்லை. அங்கு பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுடன் தங்கி இருந்த ஆரோக்கியமேரி வீட்டு சாவி, பீரோ சாவி மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை திருடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணக்கன்பட்டி கோவிலில் 13 நாட்களுக்கு பிறகு, கேரளாவில் உள்ள பாலக்காடு சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று வந்தால், அவரது கணவருக்கு கண் பார்வை தெரிய வரும் எனக்கூறி, செல்வி மற்றும் அவரது கணவரை அழைத்துக்கொண்டு கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு 17 நாட்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, இரண்டு நாட்கள் தனக்கு மதுரையில் சொந்த வேலை இருப்பதாக கூறி, செல்வி மற்றும் அவரது கணவரை கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் தங்க வைத்துவிட்டு, ஆரோக்கியமேரி மட்டும் வத்தலகுண்டு வந்து, ஆதார் கார்டு முகவரியை வைத்து வத்தலக்குண்டு காந்தி நகர் பகுதியில் உள்ள செல்வி வீட்டிற்குச் சென்று கதவைத் திறந்து பீரோவில் வைத்திருந்த, 15 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு, மீண்டும் கேரளாவிற்கு செல்வியிடம் சென்று விட்டார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகளை காணவில்லை. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார்.

இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த, வத்தலகுண்டு காவல் சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், செல்வியுடன் தோழியாக பழகிய ஆரோக்கியமேரி மொபைல் சிக்னலை வைத்து, அவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்ததை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கணக்கன்பட்டி கோவிலில் வீட்டுச் சாவி, பீரோ சாவி மற்றும் ஆதார் கார்டை திருடி வைத்து, ஆதார் கார்டில் இருந்த முகவரியின் படி, செல்வி அவரது கணவருடன் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் தங்க வைத்து விட்டு, வத்தலகுண்டு வருகை தந்து காந்தி நகரில் உள்ள செல்வி வீட்டிற்கு சென்று நகையை திருடியதை ஒப்புக்கொண்டு உள்ளார்.

மேலும் விசாரணையில் அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரோக்கியமேரி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN