சென்னை கொளத்தூரில் உள்ள வண்ணான்குளம் ஏரி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.) சென்னை கொளத்தூரில் உள்ள வண்ணான்குளம் ஏரி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என வருவாய்துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சிக்கு போன்றவற்றிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை கொளத்தூரில் வண்
Kolathur


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை கொளத்தூரில் உள்ள வண்ணான்குளம் ஏரி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என வருவாய்துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சிக்கு போன்றவற்றிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை கொளத்தூரில் வண்ணான் குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் வண்ணான் குளத்தின் ஒரு பகுதி முழுவதும் அக்கிரமிக்கப்பட்டுள்ளது என அம்பத்தூர் மண்டல ஆர்டிஓ தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி,

இந்த ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் விரைவில் அகற்ற வேண்டும் என இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ