கிறிஸ்துமஸ் பண்டிகை - சாந்தோம் தேவாலயத்தில் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனை
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்கள்
Christmas


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்கள் வைத்து கேக் வெட்டி, பாடல்கள் பாடி இயேசு பிறப்பை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வங்கக்கடலோரம் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற நிலையில் காலையிலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது, இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவே சென்னை சாந்தோம் தாமஸ் பசிலிக்கா ஆலயத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக காலையில் நடைபெற்ற சிறப்பு திருப்பள்ளியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து வந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ