திட்டக்குடி பேருந்து விபத்து - உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச) திட்டக்குடி பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கடலூர் ம
Eps


Tw


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச)

திட்டக்குடி பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு பேருந்து மற்றும் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்தனர் என்று செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ