Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து காக்க காக்க, வாரணம் ஆயிரம், கோ, நண்பன், துப்பாக்கி, அந்நியன், அயன் எனப் பல சூப்பர்ஹிட் படங்களின் வெற்றிக்குத் தனது இசையின் மூலம் துணையாக நின்றார். 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த டாப் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இவர் தற்போது ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குனர் விஜய் இயக்கும் இந்த படத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி ஸ்டூடியோஸ் - டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்திற்காக முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் - சித் ஸ்ரீராம் கூட்டணி இணைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள உன்னை நினைத்து என்ற பாடல் இன்று (டிசம்பர் 25) மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவான முதல் பாடல் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் பாடலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b