ஜனவரி 3 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா - கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு
கடலூர் , 25 டிசம்பர் (ஹி.ச.) உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சன தரிசனமும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆரு
ஜனவரி 3 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா  - கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு


கடலூர் , 25 டிசம்பர் (ஹி.ச.)

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சன தரிசனமும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று (டிசம்பர் 25) காலை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3-ந்தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன நிகழ்வை முன்னிட்டு ஜனவரி 3-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா அறிவித்துள்ளார். அதனை ஈடுசெய்ய பிப்ரவரி 14-ந்தேதி (சனிக்கிழமை ) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b