ஜனநாயகன் பட பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு தவெக கட்சி தொடர்புடைய பொருட்கள் கொண்டு செல்ல தடை
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.) தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை நிறுவி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்ப
ஜனநாயகன்


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை நிறுவி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிச.27-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்விழாவிற்கு மலேசிய அரசு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

மலேசிய அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:

5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

ஒருமுறை மைதானத்திலிருந்து வெளியில் சென்றுவிட்டால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

உணவுப்பொருட்கள், ஆல்கஹால், கேமரா, டிரோன் கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி கிடையாது.

அரசியல் தொடர்புடைய எந்த பொருளுக்கும் மைதானத்தின் உள்ளே அனுமதி கிடையாது.

விஜயின் தவெக கட்சி தொடர்புடைய டி ஷர்ட், கொடி, பேட்ஜ், போஸ்டர், குடை உள்ளிட்ட எந்த பொருளையும் கொண்டுசெல்ல அனுமதியில்லை.

தவெக கட்சி கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சளை வெளிப்படையாக பிரதிபலிக்கும் எந்த பொருளுக்கும் அனுமதியில்லை.

என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam