Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 25 டிசம்பர் (ஹி.ச.)
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் ஃபிட் இந்தியா அமைப்பின் சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
சன்சாத் கேல் மஹோத்சவ்-2025 என்ற பேரில் நடைபெற்ற இந்த போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா, கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாங்கொம்பில் அமைந்துள்ள பிரபல தனியார் சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது.
இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வெற்றிப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகளை வாழ்த்தி உரையாற்றினார்.
மத்திய தலவல் ஒளிபரப்ப மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எல்.முருகன், எம்பியும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி.உஷா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாவில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவையை சேர்ந்த கபடி வீராங்கனை நேசிகா, பிரதமர் மோடியுடன் உரையாடினார். அவர் கூறுகையில் ''எனது விளையாட்டுப் பயிற்சியால் கல்வி எதுவும் பாதிக்கப்படவில்லை. பள்ளி வேலை நேரத்துக்கு பிறகு ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறேன். எனது மாநில விளையாட்டு என்பதால் கபடியை தேர்வு செய்வேன். எங்கள் ஊரில் இந்த விழாவை ஏற்பாடு செய்தமைக்கு மிகவும் நன்றி,'' என்றார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி நேசிகா. இவர், தேசிய அளவில் சைக்கிளிங் மற்றும் மாநில அளவில் கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தவர். இவர் தான் இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் உரையாடினார்.
அவரிடம் பிரதமர் மோடி, 'நீங்கள் பங்கேற்கும் 2 விளையாட்டுகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது என்று கேட்டார். அதற்கு நேசிகா, 'மாநில விளையாட்டு என்பதால் கபடியை தான் அதிகம் பிடிக்கும்' என்றார்.
சன்சாத் கேல் மஹோத்சவ் பற்றி உங்கள் கருத்து என்று மாணவியிடம் மோடி கேட்டார். அதற்கு நேசிகா, ''இது போன்ற விளையாட்டுகள், எங்களைப்போன்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன,'' என்றார்.
Hindusthan Samachar / vidya.b